WhatsApp Button

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை - முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள்

 தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை - முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள்


  • தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்"
  • சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்.
  • உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்.
  • மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க "மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்"

  • உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம்.
  • உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!
  • உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ்!
  • நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்!
  • உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது.
  • 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல்
  • புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம்
  • மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள்








புதியது பழையவை